Monday, June 22, 2020

தரவு மற்றும் தகவல் ( Data & Information )


தரவு (  Data )

  • தெளிவான அர்த்தமற்ற, ஒழுங்கற்ற அடிப்படையான விடயங்கள் தரவு என குறிப்பிடப்படும்.
  • தரவு 2 வகையாக வகைப்படுத்தப்படுகிறது.
    • அளவுசார் தரவு ( Quantity data )
    • பண்புசார் தரவு ( Qualitive data )
அளவுசார் தரவு ( (Quantity data )
  • இத் தரவுகள் எண்ணிக்கை அடிப்படையில் காட்டப்படக்கூடியவை. எண்கணிதச் செயற்பாடுகளுக்கு இவற்றை பயண்படுத்திக்கொள்ளப்படுகிறது. இலக்க அடிப்படையில் இவற்றை வரிசைப்படுத்தவும் முடியும்.
பண்புசார் தரவு ( Qualitive data ) 
  • எண்ணிக்கை அடிப்படையில் முன்வைக்கப்பட முடியாத தரவுகள் பண்புசார் தரவு என கூறப்படும்.
  • உதாரணம் : வடிவம், நிறம், சப்தம்
தகவல் ( Information )
  • முறைவழிப்படுத்தப்பட்ட தெளிவான அர்த்தமுள்ள தரவுகள் தகவல் எனப்படும்.
  • உதாரணம் : ஒருவரது பிறந்த திகதி என்ற தரவு தற்போதைய திகதியில் இருந்து அதனைக் கழித்தல் என்ற முறைவழி மூலம் அவரது வயது என்ற தகவலினைப் பெற்றுக்கொள்ளல்.
  • தகவலின் இயல்புகள் 
    • அர்த்தமுள்ளவை.
    • ஆச்சரிப்படக்கூடியவை.
    • முன்னர் பெற்ற அறிவை புதுப்பிக்க்கூடியவை.
    • தொடர்பாடல் ஊடகமாகவும்.
    • காலத்திற்கு உரியதாக இருப்பதுடன் தீர்மானங்களை மேற்கொள்ள உதவுதல்.
கணினிகள் தரவுகளை உள்ளீடாகப் பெற்று தகவல்களை தகவல்களாக தருககன்றது. இச் செயன்முறை தரவு முறைவழியாக்கம் எனப்படுகிறது.

தகவலின் பொன் விதி ( Golden low of information ) 
  • தகவல்கள் அவை பெறப்படும் நேரத்திலே அதிகூடிய பெறுமானம் உடையவையாகக் காணப்படும். காலம் செல்லச் செல்ல அதன் பெறுமதி படிப்படியாக குறைவடைந்து சென்று அது மீண்டும் தரவாக மாறிவிடும். இச் செயன்முறை தகவல் பற்றிய பொன் விதி எனப்படும்.



No comments:

Post a Comment