Monday, June 22, 2020

தரவு மற்றும் தகவல் ( Data & Information )


தரவு (  Data )

  • தெளிவான அர்த்தமற்ற, ஒழுங்கற்ற அடிப்படையான விடயங்கள் தரவு என குறிப்பிடப்படும்.
  • தரவு 2 வகையாக வகைப்படுத்தப்படுகிறது.
    • அளவுசார் தரவு ( Quantity data )
    • பண்புசார் தரவு ( Qualitive data )
அளவுசார் தரவு ( (Quantity data )
  • இத் தரவுகள் எண்ணிக்கை அடிப்படையில் காட்டப்படக்கூடியவை. எண்கணிதச் செயற்பாடுகளுக்கு இவற்றை பயண்படுத்திக்கொள்ளப்படுகிறது. இலக்க அடிப்படையில் இவற்றை வரிசைப்படுத்தவும் முடியும்.
பண்புசார் தரவு ( Qualitive data ) 
  • எண்ணிக்கை அடிப்படையில் முன்வைக்கப்பட முடியாத தரவுகள் பண்புசார் தரவு என கூறப்படும்.
  • உதாரணம் : வடிவம், நிறம், சப்தம்
தகவல் ( Information )
  • முறைவழிப்படுத்தப்பட்ட தெளிவான அர்த்தமுள்ள தரவுகள் தகவல் எனப்படும்.
  • உதாரணம் : ஒருவரது பிறந்த திகதி என்ற தரவு தற்போதைய திகதியில் இருந்து அதனைக் கழித்தல் என்ற முறைவழி மூலம் அவரது வயது என்ற தகவலினைப் பெற்றுக்கொள்ளல்.
  • தகவலின் இயல்புகள் 
    • அர்த்தமுள்ளவை.
    • ஆச்சரிப்படக்கூடியவை.
    • முன்னர் பெற்ற அறிவை புதுப்பிக்க்கூடியவை.
    • தொடர்பாடல் ஊடகமாகவும்.
    • காலத்திற்கு உரியதாக இருப்பதுடன் தீர்மானங்களை மேற்கொள்ள உதவுதல்.
கணினிகள் தரவுகளை உள்ளீடாகப் பெற்று தகவல்களை தகவல்களாக தருககன்றது. இச் செயன்முறை தரவு முறைவழியாக்கம் எனப்படுகிறது.

தகவலின் பொன் விதி ( Golden low of information ) 
  • தகவல்கள் அவை பெறப்படும் நேரத்திலே அதிகூடிய பெறுமானம் உடையவையாகக் காணப்படும். காலம் செல்லச் செல்ல அதன் பெறுமதி படிப்படியாக குறைவடைந்து சென்று அது மீண்டும் தரவாக மாறிவிடும். இச் செயன்முறை தகவல் பற்றிய பொன் விதி எனப்படும்.



Saturday, June 6, 2020

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ( ICT )

Ict_image


பொதுவா தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்ற பரந்த அலகில் என்ன இருக்குனு சொல்ல தெரிந்த நமக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் என்றால் என்னனு சொல்ல தெரியாது. இப்ப இங்க நீங்க அத தான் தெரிஞ்சுக்க போறீங்க..

சுலபமா புரியும் படி சொன்னா ஒரு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனத்தில இருந்து இன்னுமொரு தொடர்பாடல் சாதனத்திற்கு தகவல் பரிமாறப்படுகிறது. அவ்வாறு பரிமாறப்படும் தகவல் சாதனத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டது அது நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ சேமிக்கப்பட்டு மீண்டும் பரிமாறப்படும் சொயன்முறை ' தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ' எனப்படும்.

குறிப்பு : மேற்கூறப்பட்ட செயன்முறை ஏதாவது ஒரு வலையப்பில் காணப்படும். 

ஒரு வலையமைப்பு சாதனம் எதுவாகம் இருக்கலாம். உதாரணத்துக்கு சொன்னா கணினி, தொலைபேசி, வழிப்படுத்தி, etc.